கல்முனை பிரதேசத்தில் 09 பேருக்கு கொரோனா!!!

கல்முனை பிரதேசத்தில் 09 பேருக்கு கொரோனா!!!


கல்முனை பிராந்தியத்தில் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாறை பகுதியிலிருந்து பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு சென்றவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 8 பேரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.


$ads={2}

பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை, பொத்துவில் மற்றும் நிந்தவூர் பகுதியில் உள்ளவர்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post