LTTE பயங்கரவாத தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்திய நடிகர் பாபி சிம்ஹா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LTTE பயங்கரவாத தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இந்திய நடிகர் பாபி சிம்ஹா!!


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படமான சீறும் புலி விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
$ads={2}
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துச் சீறும் புலி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். உனக்குள் நான், லைட்மேன், நீலம் போன்ற படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார். ஜி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது.


$ads={2}

இப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை இரண்டு பாகங்களாக எடுக்கப்போவதாக முன்னரே வெங்கட்டேஷ் குமார் அறிவித்திருந்தார்.

பிரபாகரனின் ஆரம்பக்காலங்கள் எப்படி இருந்தது என்பது குறித்தும், ஒரு மாணவர் போராளியாக இருந்து பின்னர் எப்படி தலைவராக மாறுகிறார் என்பது குறித்தும் முதல் பாகத்திலும், தமிழீழம் போராட்டம் குறித்து இரண்டாவது பாகத்திலும் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

LTTE ஒரு பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அமெரிக்க மற்றும் இந்தியா உட்ப்ட 32 நாடுகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( Times of India)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.