வீடியோ: யாழ் மற்றும் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தால்; அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கொந்தளிப்பு!

வீடியோ: யாழ் மற்றும் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தால்; அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கொந்தளிப்பு!


தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் மற்றும் யாழில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு நகரிலும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


குறித்த வீடியோவில் "புலிகள் ஈழம் வாதிகள் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கிறார்கள். உண்மையில் எமது நாட்டில் சட்டம் செயல்படுமாயின் இவ்வாறு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பது, வேறாக ஒரு ஈழத்தை கேட்பது மக்களுக்கும் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுகின்றனர்.


நான் நினைக்கிறேன், அவர்களிடம்  விசாரணை செய்யவேண்டும் வாக்குமூலம் பெறவேண்டும். ஏன் இந்த கடைகள் மூடப்பட்டுள்ளன என்று. இவர்கள் இன்னும் நாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கான நல்ல சந்தர்ப்பம் இது. இவற்றுக்கு தலைமை தாங்குவது யார்? இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.


எங்கள் நாட்டில் பாதுகாப்பு படைகள் உள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அளித்துள்ளோம். சரியான சிங்கள பௌத்த பாரம்பரியத்தை பின்பற்றும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார். அவர் இருக்கும் போதே இப்படி போராட்டம் நடக்கிறதென்றால், அதன் பின்னணியை தேடிப்பார்க்க வேண்டும்." என அவர் மிகவும் கொந்தளிப்புடன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post