மத்தள சர்வதேச விமான நிலையத்தை தளமாகக் கொண்ட ஸ்பார்க் ஏர் சேவை, கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆரம்பத்தில் இரண்டு Airbus A-330 சரக்கு விமானங்களை கொண்டு இயக்கும்.
மேலும் இதன் பயணிகள் விமானங்களும் விரைவில் தொடங்கப்படும் என ஸ்பார்க் ஏர் விமான சேவையின் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளின் தலைவர் உதித தன்வத்தே தெரிவித்தார்.
இதுவரை வெளியிடப்படாத நேரடி முதலீடு மூலம் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஸ்பார்க் ஏர் நிறுவனம் இயங்கவுள்ளது.
பயணிகள, சரக்கு மற்றும் தபால் சேவைகளுக்காக ஸ்பார்க் ஏர் நிறுவனத்திற்கு சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAASL) உரிமம் வழங்கியுள்ளது, மேலும் இதற்கு கேப்டன் ராபர்ட் ஸ்பிட்டல், ரம்ஸி ரஹீம், சமின் அத்தநாயக்க, ஆஷான் டி சில்வா மற்றும் சுரஞ்ஜய டி சில்வா ஆகியோர் நிறுவனத்தின் சார்பாக சர்வதேச போக்குவரத்து நடவடிக்கைகளை இயக்க அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.