கொரோனாவில் இருந்து மீண்டார் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி!

தென்னிந்திய பின்னணிப் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொடிய கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள தனது தந்தைக்கு செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக எஸ்.பி.பி இன் மகன் சரண், சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்னும் குணமாகவில்லை எனவும் எஸ்.பி.சரண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தபோதும் அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று சரியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எஸ்.பி.பி, கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்களை விரும்பி பார்த்து வருவதாகவும், தான் சொல்லவருவதை எழுதிக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவர்களின் முழுக் கண்காணிப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post