இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் தொகையை விடுவிக்குமாரு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

நாட்டில் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான உரிய தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரி மஞ்சள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டில் தற்போது மக்களுக்கு தேவையான அளவு மஞ்சள் இல்லை.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் விடுவிக்கப்படாதுள்ளதால் தாம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மஞ்சல் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு துறைமுக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள மஞ்சளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மஞ்சள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post