ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்கும் ரஷ்யாவுக்கான தூதரகர்!

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்கும் ரஷ்யாவுக்கான தூதரகர்!


ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான “ஸ்புட்னிக் 5” தான் போட்டுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கையின்மாஸ்கோவுக்கான தூதரகர் மீகஹலந்தே துரகே லமாவன்சா இன்று தெரிவித்துள்ளார்.

“நான் இலங்கையில் இருந்து திரும்பியவுடன், ம் ‘ஸ்பூட்னிக் 5’ தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். தடுப்பூசிஇப்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ளது, அதில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்”

 என லமாவன்ச அவர்கள் ரஷ்ய செய்தி ஒன்றிற்கு பேட்டி அழித்திருந்தார்.


ஆகஸ்ட் தொடக்கத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியினை பதிவு செய்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. அதனடிப்படையில் ரஷ்யா 20 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்குவதற்கானஒப்பந்தங்களையும், ஐந்து நாடுகளுடன் வெகுஜன உற்பத்திக்கான ஒப்பந்தங்களையும் கைச்சாத்திட்டுள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, “ஸ்பூட்னிக் 5” தடுப்பூசியானது கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைவளர்க்கும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளுக்கு தேவையான 3 ஆம் கட்டத்தை தடுப்பூசிஇன்னும் முடிக்கவில்லை.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post