கொழும்பில் 12 சீனர்கள் கைது!

கொழும்பில் 12 சீனர்கள் கைது!


நேற்று இரவு கொல்லுபிட்டியவில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டது.

கொல்லுபிட்டியவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உரிமம் பெறாத சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை மற்றும் வரித்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின் போது 09 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் அடங்கியகுழு கைது செய்யப்பட்டது.

ரூ. 6.5 மில்லியன் பணம், ஒரு கணினி மற்றும் தொலைக்காட்சி பெட்டி என்பவை சந்தேக நபர்களின் வசம் இருந்து காவல்துறையினர்கைப்பற்றினர்.

சீன நாட்டினர் இன்று கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post