கண்டியில் மேலதிக வகுப்பு மாணவிகள் கழிப்பறையில் துஷ்பிரயோகம்; ஆசியர் உட்பட 6 பேர் கைது!

கண்டியில் மேலதிக வகுப்பு மாணவிகள் கழிப்பறையில் துஷ்பிரயோகம்; ஆசியர் உட்பட 6 பேர் கைது!

கண்டி நகரில் பொது கழிப்பறைக்குள் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாணவிகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பொது கழிப்பறைக்கு செல்லும் போது இந்த குழுவினர் அவர்களை அச்சுறுத்தி பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஆளாகிய மாணவிகள் சிலர் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய 06 பேர் கொண்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்குள் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post