கத்தாரில் NOC யின்றி தொழிலை மாற்றிக் கொள்ள பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் NOC யின்றி தொழிலை மாற்றிக் கொள்ள பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்கள்!

கத்தாரில் பணிபுரிபவர்கள் NOC இல்லாமல் தொழிலை மாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. அந்த வகையில் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA) ஒருவர் ஆட்சேபனை சான்றிதழ் இல்லை (NOC) யின்றி தொழிலை மாற்றிக் கொள்வதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைத் வெளியிடடுள்ளது.

1. பணியாளர் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA) அமைச்சின் Electronic Notification System of the ADLSA மூலம் தற்போது பணி புரிவருக்கு அறிவித்தல் வழங்க வேண்டும். இதற்கு ஒரு மாத அறிவிப்பு (Notice Period) அவசியமாகும்.

2. ஒருவர் தனது தொழில் வழங்குநரை இலத்திரனியல் அறிவிப்பு முறைமை மூலம் மாற்றிக் கொள்ள விரும்பும் போது பின்வரும் ஆவணங்கள் கட்டாயமாகும்.

A. நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA) அமைச்சின் தொழில்வழங்குநர் மாற்றத்திற்கான படிவம் (Change of Employer Form)

B. பழைய தொழில் வழங்குனரால் வழங்கப்பட்ட ஒப்பந்த நகல்( ADLSAவினால் அங்கீகரிக்கப்பட்டது). ஒப்பந்த நகல் இல்லாத போது employment offer

C. புதிய தொழில் வழங்குநரின் Employment Offer. (அரபு மொழியில்)

3. பணியாளர்கள் மற்றும் புதிய தொழில் வழங்குநனர் போன்றோர் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA) அமைச்சிடமிருந்து தொழிலை மாற்றிக் கொள்ளல் தொடர்பான குறுந்தகவலைப் பெற்றுக் கொள்வார்கள்.

4. அதன் பின்னர் புதிய தொழில் வழங்குநர் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA)வின் Digital Authentication System. மூலம் புதிய தொழில் ஒப்பந்தத்தை தயாரிப்பார்.

5. அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட புதிய தொழில் ஒப்பந்தத்தை அச்சிட்டு தொழில் வழங்குநர் பணியாளருடன் கலந்துரையாடி, பின்னர் கையொப்பத்தை பெற்றுக் கொள்வார்.

6. புதியதாக கையொப்பமிடப்பட்ட ஒப்பந்த நகல் மீண்டும் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA)க்கு இணையம் ஊடாக சமர்ப்பிக்கப்படும். இதற்கு 60 றியால்கள் கட்டணமாக அறவிடப்படும்.

7. தொழில் ஒப்பந்தம் அனுமதியளிக்கப்பட்ட பின்னர் புதிய தொழில் வழங்குநனர் பணியாளருக்கு புதிய கத்தார் அடையாள அட்டைக்கு (QID) விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்த பின்னர் பணியாளர் புதிய தொழிலை ஆரம்பிக்க முடியும். தற்போது பணியாளர் புதிய தொழில் வழங்குநரிடமிருந்து கத்தார் ID. மற்றும் ஆரோக்கி அட்டைக்கான விண்ணப்ப படிவம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தகுதிகாண் காலத்தில் ஒரு ஊழியர் வேலைகளை மாற்ற விரும்பினால், தற்போதைய முதலாளிக்கு குறைந்தது ஒரு மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.. புதிய முதலாளி தற்போதைய முதலாளிக்கு ஆட்சேர்ப்பு கட்டணம் மற்றும் ஒரு வழி விமான டிக்கெட்டை தற்போதைய மற்றும் புதிய முதலாளிகள் ஒப்புக் கொண்ட மட்டத்தில் ஈடுசெய்ய வேண்டும், அது ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் இரண்டு மாத சம்பளத்துக்கு மேல் அதிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதாக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (ADLSA) தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.