என்மீது எறியப்பட்ட கற்களை நான் நிர்மாணிக்கவுள்ள சமூக நிலைய அடிக்கல்லாக பயன்படுத்துவேன்! -சஜித்

என்மீது எறியப்பட்ட கற்களை நான் நிர்மாணிக்கவுள்ள சமூக நிலைய அடிக்கல்லாக பயன்படுத்துவேன்! -சஜித்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று ரத்மலானையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அவர் மீது எறியப்பட்ட கற்களை, அந்தப் பகுதியில் அவர் நிர்மாணிக்க விரும்பும் சமூக நிலையத்துக்கான அடித்தளம் அமைக்க பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.


மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஒரு கூட்டத்தில் இருந்தபோது அவர் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. குறித்த கல்லை அவர் சுச்சரிதா மண்டபத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தினார்.


அதேபோன்ற சஜித் பிரேமதாசவும் தமது கூட்டத்தின் போது எறியப்பட்ட கல்லை சமூக நிலையம் ஒன்றுக்கான அடிக்கல்லாக பயன்படுத்தவுள்ளதாக விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.


இதற்கிடையில் குறித்த தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பின்றி நடந்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார செய்தியாளர் சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.


ரத்மலானைவில் சஜித் பிரேமதாசவின் கூட்டத்தின் மீதான தாக்குதல், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்பே நாட்டின் ஜனநாயகத்துக்கு சவால் ஏற்பட்டுள்ளமைக்கு ஒரு குறியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது ஒருவரின் கருத்துரிமையை மீறுவதாகும் என்றும் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர். முஜிபுர் ரஹ்மான், தங்களை தேசபக்தர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகள் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள 20வது திருத்தத்தை ஏன் எதிர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post