இலங்கையில் ISIS பயங்கரவாதிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 03 அரசியல்வாதிகளின் பெயர்கள்!

இலங்கையில் ISIS பயங்கரவாதிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 03 அரசியல்வாதிகளின் பெயர்கள்!


ISIS அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து தான்னால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விஜயதாச ராஜபக்ஷவை குறுக்கு விசாரணை செய்ய விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இவ்விருவரும் கடந்த 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டது.


இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஆணைக்குழு முன்னிலையில் விஜயதாச ராஜபக்ஷ, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பித்திருந்தார்.


குறித்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ M.L.A.M ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.


ISIS அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து 2016 நவம்பர் 18 ஆம் திகதி தான் ஆற்றிய உரையினை மறுத்ததன் மூலம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ரஹ்மான் ஆகியோர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினர் என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


அந்த நேரம் அரசாங்கம் தனது அறிக்கை குறித்து கவனம் செலுத்தியிருந்தால் ஈஸ்டர் தாக்குதல்கள், ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post