இவ்வாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி தொடர்பான அறிவிப்பு!

இவ்வாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி தொடர்பான அறிவிப்பு!


இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் வெட்டுப்புள்ளி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன் துணைத் தலைவர் பேராசிரியர் ஜனிதா லியானகே, பல்கலைக்கழகங்களின் அனைத்து துணைவேந்தர்களின் பங்கேற்புடன் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகக் கூறினார்.


பல்கலைக்கழக சேர்க்கைக்கான 36 அனுமதிக்கான 'அப்டிடியுட்' பரீட்சைகளின் முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன, மேலும் 2019 க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இவ் ஆண்டு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 என்று பேராசிரியர் ஜனிதா லியானகே தெரிவித்தார்.


$ads={2}


-teachmore.lk


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post