PUBG உட்பட 118 சீன ஆஃப்களை தடை செய்த இந்தியா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PUBG உட்பட 118 சீன ஆஃப்களை தடை செய்த இந்தியா!

சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் PUBG உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா - சீனா இராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் வலுத்து வருகிறது. இதனால் TIKTOK உட்பட 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சீனா தனது இராணுவத்தை பின்வாங்க மறுத்தது. கடந்த சில தினங்களாக மேலும் சீன இராணுவம் அத்துமீறியுள்ளது.

இந்நிலையில் Baidu, Baidu Express Edition, Tencent Watchlist, FaceU, WeChat Reading, Ludo All Star, Alipay, Tencent Weiyun மற்றும் Rise of Kingdoms: Lost Crusade உட்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.