20ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதன்படி, நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் இன்று (02) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த வரைவிற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதனை இன்று இரவு விசேட வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post