இந்த மனுவை சுயாதீன குழு எண் 1 இன் கீழ் கண்டி மாவட்டத்திற்காக போட்டியிட்ட அமித் வீரசிங்க தாக்கல் செய்ததாக நீதிமன்ற நிருபர் ஒருவர் தெரிவித்தார்.
மனுவின் பிரதிவாதிகளாக கண்டி மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் கண்டி மாவட்டத்திற்காக போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களின் பெயர்கள் உட்பட 19 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் போது பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அமீத் வீரசிங்க தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தான் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழந்ததாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.