கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு ஆபத்தில்லை! ஆய்வு பணியகம் தெரிவிப்பு!

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (02) காலை மற்றும் கடந்த 29ஆம் திகதி சிறிய அளவிலான நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாகவும் எந்த பாதிப்பும் இல்லையென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மஹகந்தராவ பகுதியில் உள்ள ஆய்வகத்தில் இந்த நில அதிர்வு சிறிய அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது நில எல்லைகளுடன் தொடர்புப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அதிகாரிகள் 6 பேரை கொண்ட இரு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post