லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்! SLC வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (லபிள்) தொடர், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து நடாத்தவுள்ள உரிமம் சார்ந்த T20 லீக் இவ்வாண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக தொடங்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த போட்டிகள் நவம்பர் 14 முதல் டிசம்பர் 06 வரையான காலப்பகுதியில் விளையாட திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

23 மேட்ச்களை அடங்கிய இத்தொடர் மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்களான ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி - பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சூரியவெவ ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் போன்றவற்றில் இடம்பெறவிருப்பமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து 5 அணிகள் இப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post