காணி உரிமம் இல்லாதவர்களுக்கு மூன்று மாதத்துக்குள் தீர்வு! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணி உரிமம் இல்லாதவர்களுக்கு மூன்று மாதத்துக்குள் தீர்வு! -ஜனாதிபதி

நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிரச்சினைகள் இல்லாத காணிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் காணி உறுதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காணி உறுதிகள் இல்லை என்பது நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தான் விஜயம் செய்த போது மக்கள் முன்வைத்த பிரதான பிரச்சினை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல பரம்பரைகளாக வாழ்ந்து வந்து, கமத்தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் காணி உறுதி இல்லாத காரணத்தினால் அவர்கள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பிரச்சினையை தீர்க்க நாடு மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு பொருந்தும் வகையில் காணி கொள்கையில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற காணி முகாமைத்துவ நடவடிக்கைகள், அரச துறைகள், காணி மற்றும் வளங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

காணி உறுதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் நாட்டின் அபிவிருத்தியும் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது.

கமத்தொழில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் போது காணி பயன்பாட்டு கொள்கை மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.