இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கமாட்டார் எனவும், அவர் பதவி விலகிய பின்னர் பசில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக, இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
எனினும் 20 நிறைவேறிய கையோடு பசில் பாராளுமன்றம் வரமாட்டார் எனவும், மஹிந்தவின் ஓய்வின் பின்னரே அவர் வருவார் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் ராஜபக்ஷ சகோதரர் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதால் அது பெரும்பாலும் பசிலுக்கே வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, 20ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கைக்கான வரையறை நீக்கப்பட்டாலும், புதிதாக எவருக்கும் நியமனங்களை வழங்காதிருக்க ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.