தங்கத்தின் இறக்குமதி வரி மற்றும் உற்பத்தியாளர்களின் வரி நீக்கம்! -ஜனாதிபதி

தங்கத்தின் இறக்குமதி வரி மற்றும் உற்பத்தியாளர்களின் வரி நீக்கம்! -ஜனாதிபதி

தங்கத்தின் மீதான 15% இறக்குமதி வரியையும், இரத்தினம் மற்றும் நகை உற்பத்தியாளர்களின் இலாபத்திற்கான 14% வருமான வரியையும் நீக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்று (07) முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டு முதல் மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு வழங்கப்பட்ட வருமான வரி சலுகை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையிலிருந்து நீக்கப்பட்டது.

"2018 ஆம் ஆண்டில், தங்க இறக்குமதிக்கு 15% வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் நகைகளின் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், மாணிக்கத்துறை மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதனால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.