கனவில் தோன்றி புதையல் காட்டிய இறந்துபோன தந்தை; எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேலை மகன் கைது!

கனவில் தோன்றி புதையல் காட்டிய இறந்துபோன தந்தை; எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேலை மகன் கைது!

தற்போது உயிருடன் இல்லாத தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையலை தோண்டி எடுத்த மகனை யானை முத்துக்களுடன் கைது செய்துள்ளதாக புத்தல கோனகங்ஹார பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'எனது தந்தை உயிருடன் இல்லை. ஒரு நாள் தந்தை கனவில் தோன்றினார். அப்போது அவர் புதையல் ஒன்று என்னிடம் கூறினார். அது எனக்குரியது அதனை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்' என சந்தேக நபர் கூறியுள்ளார்.

இந்த சந்தேக நபர் கோனகங்ஹார வகுருவெல பிரதேசத்தில் நிலத்தை தோண்டி புதையல் எடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருங்கல்லில் செய்யப்பட்ட கலசத்தில் இந்த யானை முத்துக்கள் இருந்துள்ளன. அதனை உடைத்து சந்தேக நபர் அவற்றை எடுத்துள்ளார். மாணிக்க கங்கையில் வீசப்பட்ட கல் கலசம், யானை முத்துக்கள் வைக்கப்பட்டிருந்த பேழை கால்வாய் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதையலில் கிடைத்த யானை முத்துகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோனகங்ஹார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவறை குழியை வெட்டுவதாக கூறி சந்தேக நபர் புதையலை தோண்டி எடுத்துள்ளார்.

வகுருவெல புத்தல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இந்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.