அமெரிக்காவில் தற்போது பற்றி எரியும் காட்டுத் தீக்கு 25 பேர் பலியாயினர்.
வரும் நாள்களில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க 20,000-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.
இன்னும் சில நாள்களில் குளிர்ச்சியான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வாஷிங்டன், ஆரெகன், கலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களில் காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆரெகன் மாநிலத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீயில் கருகியது. சுமார் 500,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் சுமார் 1.5 மில்லியன் ஹெக்டர் அளவிலான நிலப்பரப்பு தீயில் கருகியது.
$ads={1}
$ads={2}