துபாய் மற்றும் கத்தாரில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

துபாய் மற்றும் கத்தாரில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று கொறோனா அச்சுறுத்தலால் நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 405 இலங்கையர்கள் இன்று (13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 341 பேரும், கட்டாரில் இருந்து 64 பேரும் நாட்டை வந்தடைந்தாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அரச மற்றும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post