சவூதியில் பணிபுரியும் இலங்கையர்கள் கலவாதியாகிய விசா கட்டணம் செலுத்த தேவையில்லை! -சவூதி அரசு

சவூதியில் பணிபுரியும் இலங்கையர்கள் கலவாதியாகிய விசா கட்டணம் செலுத்த தேவையில்லை! -சவூதி அரசு

கொரோனா தொற்றுநோய் காரணமாக விசா காலாவதியாகிய மற்றும் விசா செல்லுபடியாகும் நிலையில் நாட்டைவிட்டு வெளியேற முடியாத அனைத்து இலங்கை தொழிலாளர்கள்,எந்தவொரு கட்டணமும் அபராதமும் வசூலிக்கப்படாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சமயம் சவூதி விமான நிலையங்களின் மூலம் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இது இலங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நட்பு ரீதியாக சவூதி அரசு மேற்கொள்ளும் தற்காலிக நடவடிக்கையாகும்.

சவூதி அரசாங்கத்தின் இந்த முடிவு தற்போது நாட்டிற்கு அழைத்துவரும் பணியில் இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.

இந்த முடிவு இரு நாடுகளும் தற்போது அனுபவித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளையும் குறிக்கிறது மட்டுமல்லாது, இலங்கை வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை சவூதி அரசுடன் கொண்டுள்ள செயலூக்கமான ஈடுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

கொரோனா தொற்று காலத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவ்வாரான நலன்புரி நடவடிக்கைகள் மூலம் தங்கள் உதவிகளை வழங்கியதற்காக சவூதி அரசுக்கு தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post