ஐலண்ட் பத்திரிகையின் பத்திரிகையாளர் வீட்டினுள் இறந்த நிலையில் மீட்பு!


ஐலண்ட் பத்திரிகையில் பத்திரிகையாளர் சாகி ஜப்பார் இன்று (09) பெலவத்தவில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.


பொலிஸ் வட்டாரங்கள் மரணத்தை உறுதிப்படுத்தியதோடு மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


ஐலண்ட் பத்திரிகையின் பத்திரிகையாளர் ஒருவர் சகோதர ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், சாகி அவரது வீட்டில் தனியாகவே தங்கியிருந்ததாகவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைக்கு வரவில்லை என்றும் கூறினார்.


மேலும் அவரது உறவினர் ஒருவர் பூட்டிய வீட்டில் சோதனை செய்தபோது, ​​பத்திரிகையாளர் இறந்து கிடந்ததை அவதானித்தாக தெரிவித்திருந்தாக கூறினார்.


இதனிடையில், வீட்டில் தனியாக வசித்து வந்த பத்திரிகையாளர் பல நாட்களுக்கு முன்னே இறந்திருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post