86 வயது மூதாட்டி கடத்தப்பட்டு 37 வயது நபரால் கற்பழிப்பு!!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் பதிவாகின்றன. ஆனால் குறித்த  இந்த சம்பவம் கற்பனை செய்வது கடினம் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்தியா - புதுடெல்லியின் சாவ்லா எனும் பகுதியில் 86 வயது பெண் ஒருவர், 37 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பொலிஸார் சோனு எனும் நபரை கைது செய்தனர்.


கடந்த செப்டம்பர் 07ஆம் திகதி மாலை 86 வயதான பெண் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் செல்லும் வழியில், தனது இரு சக்கர வண்டியில் லிப்ட் வழங்குவதாக கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் குறித்த அந்த மூதாட்டியின் அழுகைச் சத்தம் கேட்டு உள்ளூர் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குற்றவாளியைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


$ads={1}


இது குறித்து துணைக்காவல் ஆணையர், IPC 376 (கற்பழிப்பு) பிரிவின் கீழ் சாவ்லா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். 


பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் இரத்தப்போக்கு மற்றும் மிகுந்த அதிர்ச்சியில் இருந்துள்ளார். அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பல காயங்கள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உடல்நிலை சரியான காரணத்தால் வெளியேற்றம் செய்யப்பட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post