எச்சரிக்கை: வேலைவாய்ப்பு வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி!

ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பண மோசடிக்கான விளம்பரங்களை பிரசுரித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையின் கணணிக் குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாக கூறி இந்தக்குழு விளம்பரங்களை செய்து வருவதாக தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறும் தாய்லாந்தின் இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

குலுக்கள் முறையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் வங்கிகளில் பணத்தை செலுத்துமாறும் விளம்பரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நிலையில் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று இலங்கை காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post