அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள இலங்கையில் கஞ்சா செய்கையை சட்டரீதியாக்க அரசாங்க தரப்பில் முன்மொழிவு!

அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள இலங்கையில் கஞ்சா செய்கையை சட்டரீதியாக்க அரசாங்க தரப்பில் முன்மொழிவு!

இலங்கையில் கஞ்சா செய்கையை சட்டரீதியாக அங்கீகரிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என அரசாாங்க தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள விடயம் குறித்து ஆராய விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டுக்கு சிறந்த தீர்மானத்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கஞ்சா நாட்டுக்கு நல்லதா இல்லை என்பது தொடர்பிலும் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதன் மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது தொடர்பிலும் ஆராய விசேட மனோநிலை மருத்துவர் அனுஜ மகேஸ் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.

அறிக்கை கிடைத்தபின் ஊடாக சந்திப்பு நடத்தி நாட்டுக்கு நல்ல தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.