கல்முனையை சென்றடைந்த நியூ டைமோண்ட் ஆய்வு நிபுணர்கள்!

கல்முனையை சென்றடைந்த நியூ டைமோண்ட் ஆய்வு நிபுணர்கள்!

சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பிற்றிய New Diamond கப்பல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு குழுவினர் கல்முனையை சென்றடைந்துள்ளனர்.

பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று (06) காலை இலங்கைக்கு வருகைதந்தனர்.

இந்நிலையில், கல்முனைக்கு சென்றுள்ள அவர்கள், இன்று மாலை கடற்படையின் யுத்தக் கப்பல் ஒன்றின் மூலம் தீப்பற்றிய கப்பலை நோக்கிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணைக் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்புத் திணைக்களத்தின் 20 பொறியியலாளர்களும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

மேலும், மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.