தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில்?

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அந்த கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 74 வது ஆண்டு நிறைவு வைபவத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாம் அணி ஒன்றை தெரிவு செய்யும் போது, சிறந்த வீரர்தானே போட்டியில் விளையாடுவார். பெயர்களின் அடிப்படையில் போட்டிகளில் விளையாட மாட்டோம்.

பரம்பரையை சேர்ந்தவர் விளையாட மாட்டார். நாம் எப்போது சிறந்த அணியை உருவாக்கவே முயற்சிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாத்திரமல்ல, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் அரசியலமைப்புச் சட்டம், திருத்தச் சட்டம் குறித்து நன்கு அறிந்த திறமையான நபர் ரணில் விக்ரமசிங்க எனக் கூறப்படுகிறது.

இப்படியான சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தமாக நன்கு அறிந்த நபர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இது சம்பந்தமாக ரணில் விக்ரமசிங்க தனது விருப்பத்தை இன்னும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post