மாடறுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று - இனி மாடறுக்க முடியாதா?

மாடறுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் இன்று - இனி மாடறுக்க முடியாதா?


மாடறுப்பு தடையினை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மறுஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சர்கள் அமைச்சரவை கூடியது.


$ads={2}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் செப்டம்பர் 08 அன்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மாடறுப்புக்கு தடைவிதிக்க முன்மொழிந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த முடிவு ஒரு மாதம்தாமதமாக எடுக்கப்படும் என அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும்தெரிவித்திருந்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post