இரட்டை பிரஜாவுரிமை இல்லையெனில், இன்று இலங்கை இரு நாடுகளாக பிரிந்திருக்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரட்டை பிரஜாவுரிமை இல்லையெனில், இன்று இலங்கை இரு நாடுகளாக பிரிந்திருக்கும்!


இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் இல்லாமல் போயிருந்தால், இலங்கை தற்போது இரண்டு நாடுகளாக பிளவுப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={1}

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இல்லை என்றால், தற்போது இலங்கை இரண்டு நாடுகளாக மாறியிருக்கும். முழுமையான இலங்கை குடியுரிமை கொண்ட இலங்கையர்களே நாட்டை அழித்தனர்.

யுத்தத்தை வழி நடத்திய கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வசதிகளை வழங்கி, சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொடுதம்த பசில் ராஜபக்சவும் இரட்டை குடியுரிமை கொண்டவர்.

பசில் ராஜபக்ச மிகவும் பாடுபட்டு பெற்றுக்கொடுத்த வெற்றிக்கான பிறப்பத்தாட்சி பத்திரத்தை எழுதிக்கொள்ள அவசரப்படும் தேசிய அமைப்புகளுக்கு ஆரம்பத்தில் அவரது இரட்டை குடியுரிமை நினைவுக்கு வரவில்லை” என மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

ද්විත්ව පුරවැසියන් නොසිටින්නට අද ලංකාවේ රටවල් දෙකකි. රට විනාශ කළ සියළු දෙනා පූර්ණ ලාංකිකයන්ය.

Posted by Mahinda Pathirana on Saturday, 12 September 2020

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.