பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு வந்தவர் தனிமைப்படுத்தலில் திடீர் மரணம்!

பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு வந்தவர் தனிமைப்படுத்தலில் திடீர் மரணம்!


சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என்கிற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியான நுகேகொடையைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்திருக்கின்றார்.

கடந்த 02ஆம் திகதி பஹ்ரைனிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இவர் சிலாபம் பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.


$ads={1}


இந்த நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இதனிடையே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார் என்று சிலாபம் வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்தவரது இரத்த மாதிரி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான விடயங்கள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post