மண்சரிவு எச்சரிக்கை - நான்கு மாவட்டங்களுக்கு

மண்சரிவு எச்சரிக்கை - நான்கு மாவட்டங்களுக்கு


நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலையால் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை , கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் குறித்த மாவட்டங்களில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகிய காரணத்தினாலேயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மலையகத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post