பல்டி அடிக்கவிருக்கும் ரிஷாட், ஹக்கீம், திகாம்பரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்டி அடிக்கவிருக்கும் ரிஷாட், ஹக்கீம், திகாம்பரம்!


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தகவல்களை சிங்கள இணைய ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் இவர்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டிருந்தன.

எனினும் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருடன் இவர்கள் முரண்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையிலேயே ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.