நாட்டின் இப்பகுதியில் நில அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது!

நாட்டின் இப்பகுதியில் நில அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது!


எதிர்வரும் நாட்களில் மஹாவலி நீர்த்தேகத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களில் சிறிய நில அதிர்வுகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் அழுத்தம் காரணமாக அல்லது நீர் தேக்கத்திற்கு அருகில் சுண்ணாம்பு கற்கள் உடைக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக இவ்வாறான அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர் திஸாாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி மற்றும் இம்மாதம் 02ஆம் திகதி விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இரண்டு ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. இந்த நில அதிர்வு விக்டோரியா நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள பாறைகளில் பெரும்பாலானவை டோலமைட் சுண்ணாம்பு, சிதைந்த கார்பனேட் பாறைகள் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

இந்த பாறைகளின் அழுத்தம் குறைந்தமையினால் கடந்த இரண்டு நாட்களாக நில அதிர்வு ஏற்பட காரணம் எனவும் இந்த நிலைமையை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நில அதிர்வுகள் எதிர்வரும் நாட்களிலும் ஏற்பட கூடும் எனவும், நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தின் அளவு குறைந்து கூடினால் இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post