மத்திய மாகாணம் உட்பட மேலும் சில மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மாகாணம் உட்பட மேலும் சில மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!


மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


இன்று (25) பிற்பகல் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.


இதேவேளை, இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்தங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post