வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்து!

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த விபத்து!


வீடமைப்புத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகினதில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த இராஜாங்க அமைச்சரின் ஜீப்  கொழும்பு – கட்டுநாயக்க பிரதான வீதியில்   கட்டுப்பாட்டை இழந்து  பாதையின் பாதுகாப்பு மதில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது காயமடைந்த இராஜாங்க அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post