பலத்த காவலுடன் பிள்ளையான்; விசாரணைகளின் பின் வெளியேற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு நேற்றைய தினம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கடந்த 2015 ஒக்டோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post