இவர்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு!

இவர்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பணப்பரிசு!


இலங்கையில் செயற்படும் பாதாள உலக குழுவினரிடம் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உட்பட பாரிய ஆயுதங்கள் உள்ளதாக புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.

பிரபு கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான ஆயுதங்களை தம்வசம் வைத்துள்ளனர்.

குறித்த ஆயுதங்களை பாதாள உலக குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் துப்பு வழங்குபவர்களுக்கு மிகப்பெரிய அளவிலான பணப்பரிசு ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் நபர்களுக்கும், பொலிஸாருக்கு உதவும் நபர்களுக்கும் வழங்கப்படும் பணப்பரிசை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post