இலங்கையின் சகல தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர் மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.