ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படவில்லை - உண்மையினை கூறிய முஜிபுர் ரஹ்மான்

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்படவில்லை - உண்மையினை கூறிய முஜிபுர் ரஹ்மான்


சஹ்ரான் ஹாஷிம் மற்றொரு பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத படுகொலையினை நடத்தியதாகநாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன் சாட்சியங்களை வழங்கிய பின்னர் அவர்ஊடகங்களுடன் தனது கருத்துக்களை தெரிவித்த போது. கூறியதாவது, இத்தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களைப் பற்றிய சரியானதகவல்களைப் பெற வேண்டும் எனின், நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் சாரா என்ற பெண்ணை இலங்கைக்கு அழத்து வரவேண்டும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில், நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு தற்கொலை செய்து காரியங்களைசாதிக்கும் அளவுக்கு பிரச்சினைகள் இல்லை என்றார்.


$ads={2}

மேலும், முன்னாள் ஐ.ஜி.பி புஜித் ஜெயசுந்தர நேற்று ஜனாதிபதி ஆணையத்தின் முன் ஒப்புக்கொண்டதாவது, காவல் துறையின் சிலபொறுப்பற்ற நடவடிக்கைகளே சஹ்ரான் ஹாஷிம் நாட்டில் சுதந்திரமாக செயல்பட காரணமாக அமைந்தது. 

 மேலும் அவர், சஹ்ரான்குழுவின் உறுப்பினரான அமி மொஹிதீன் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


அந்த சமயம் சஹ்ரான் ஹாஷிமை சிஐடியினர் கைது செய்திருந்தால், ஈஸ்டர் தாக்குதலஒ தடுக்க முடியும் என்று முன்னாள் ஐஜிபி புஜித்ஜெயசுந்தரா மேலும் தெரிவித்திருந்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post