இதன்படி, ஆரம்ப வகுப்புகள் நாளை மறுதினம் (08) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் 6ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந் நிலையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை தவிர்த்து வருவதாகவும் சுகாதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.