வங்கிக் கடன் வட்டியை உடனடியாக குறைக்க தீர்மானம்!

வங்கிக் கடன் வட்டியை உடனடியாக குறைக்க தீர்மானம்!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு திரும்பியவுடன் உடனடியாக வங்கி கடனை நூற்றுக்கு 7 சதவீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வர்த்தகர்கள் சிலரிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வங்கி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வர்த்தகம் செய்து வருடம் நிறைவடைந்த பின்னரே நட்டம் என்பது தெரியும். நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் 28 சதவீத வட்டி அறவிடப்பட்டது. நூற்றுக்கு 25 - 20 வீதம் வட்டி அறவிட்டு அபிவிருத்தியடைந்த நாடு ஒன்று உலகில் இல்லை.

Double Digit Interest Rate என்ற இரட்டை இலக்க வட்டி தற்போது நீக்கப்பட்டு, “Single Digit Interest Rate Lending" என்ற ஓரிலக்க வட்டியே தற்போது உள்ளது. இன்னும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்தவுடன் வங்கி வட்டியை 7 வீதமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்னறது.

சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த ஓரிலக்க வரியே உள்ளது. அதற்கமைய மேலும் வட்டியை குறைப்பதற்கே எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post