இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன விற்பனையாளர்கள் கையிருப்பில் இருக்கும் வாகனங்கலுக்கு அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் விலையை உயர்த்தும் காரணமாக விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், விலைகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை நுகர்வோர் விவகார ஆணையம் மூலம் ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடனுறுதிக் கடிதம் (LC) தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதிகரித்து வரும் வாகனங்களின் விலையைச் சேர்த்து, சந்தையில் இருக்கும் காலப்பகுதிக்கு வாகனத்தின் விலையில் வட்டி சேர்ப்பதன் மூலம் அதிகபட்ச விலையில் விற்கக்கூடிய விலையை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறை சில மேற்கத்திய நாடுகளில் செயலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.