அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நாட்டிற்குத் தேவையில்லாத பல விடயங்களைக் கொண்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதூங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரட்டை குடிமக்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமற்ற ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குறைபாடுள்ள பல விடயங்கள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.