இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருளின் விலையில் அதிகரிப்பு!


இலங்கையில் ஹெரோயின் போதைபொருளின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கை காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாட்டில் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருட்களை கட்டுப்படுத்தும் மற்றும் கடத்தல் செயற்பாடுகளை முறியடிக்கும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடக்கூடியது.

இதேபோன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஊடாக இடம்பெறும் போதைபொருள் விற்பனையை முற்றாக ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைபொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு துணையாக உள்ள அதிகாரிகள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post