சொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொகுசு ஹோட்டலாக மாறவுள்ள கொழும்பு கஃபூர் கட்டிடம்!!

கொழும்பு - கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பழங்கால கஃபூர் கட்டிடத்தை சொகுசு ஹோட்டலாக மாற்றும் திட்டம் நேற்று துவங்கிவைக்கப்பட்டது.

நகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரமயமாக்கல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவவின் ஆதரவின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.


கொழும்பு துறைமுகத்திற்கு பயணக் கப்பல்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிக்காக இந்த கட்டிடம் சொகுசு ஹோட்டலாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“கஃபூர் கட்டிடம் இலங்கையில் உள்ள ஒரு பழங்கால மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாகும். இது 1915 ஆம் ஆண்டில் மாணிக்க தொழிலதிபர் அப்துல் கபூர் என்பவரால் கட்டப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் வழியாக வந்த மக்களுக்கு இரத்தினக் கற்களை விற்பனை செய்வதற்காக தனது வணிக ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை கட்டினார். எனவே, இந்த கட்டிடம் இலங்கைக்கு வரலாற்று மதிப்புமிக்கது ’’ என்று விளக்கினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.