
இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் பின்னர் new diamond கப்பலில் ஏற்பட்ட அதிவேக தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலப்பகுதியில் விமானப்படை மேற்கொண்ட அதிவிசேட மீட்புப்பணி இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 440,000 லீட்டர் நீர் 176 தடவைகள் குறித்த கப்பலின் தீப்பரவல் ஏற்பட்ட பகுதி மீது தெளிக்கப்பட்டதாகவும், இதற்காக சுமார் 100 மணித்தியாலங்கள் விமானங்கள் வான்பரப்பில் பறந்துள்ளதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.